Skip to main content

'வேட்பாளர் தோற்றால் நீங்கள்தான் நீக்கப்படுவீர்கள்'-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கறார்

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

'If the candidate loses, you will be removed' - DMK leader M.K.Stalin said

 

எதிர்வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது. இதற்காக அண்மையில் அதன் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள்  கூட்டம் இன்று காணொளி வாயிலாக தொடங்கியுள்ளது.

 

இதில் மாவட்டச் செயலாளர்கள் 72 பேர் காணொளி வாயிலாக இணைந்துள்ளனர். அதேபோல் அமைச்சர்கள், தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்களும் இந்த காணொளி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மண்டல வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டங்கள் நடத்தி இருந்தார்.

 

இந்நிலையில் இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொறுப்பாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை கொடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தோற்றால் அந்த மாவட்டத்திற்கான மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்படுவார். தொகுதிப் பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்படுவர். தேர்தல் பணியில் தொய்வு இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். அவர்கள் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். திமுக கூட்டணியின் வேட்பாளர் தோல்வி அடைந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் முடிவு எதிரொலி- 'இந்தியா' கூட்டணி வெளியிட்ட திடீர் அறிவிப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Election result reverberation - sudden announcement made by 'India' alliance

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 42 இடங்களிலும், பாஜக  9 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 72 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும், மற்றவை 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 45 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா அல்லது இல்லையா என்பது தொடர்பான கருத்துக்கள் எழுந்து வருகிறது.  5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மல்லிகார்ஜுன கார்கே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'இதுவா சமூக நீதி?' - ராமதாஸ் கேள்வி

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 'Is this social justice?'- Ramadoss asked

 

அண்மையில் அரசு மாநகர பேருந்துகளில் இலவசப்பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளிடம் பேருந்து நடத்துநர்கள் பெயர், வயது, செல்போன் எண், சாதி ஆகியவற்றை கேப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியால் முன்மொழியப்பட்ட திட்டம்.

 

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் அவர்களின்  பெயர், வயது, சாதி, கல்வித்தகுதி உள்ளிட்ட 15 வகையான வினாக்கள் கேட்கப்பட்டு, அதன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. இது தேவையானதும் கூட. இந்தத் தகவல் சேகரிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த போக்குவரத்து அமைச்சர் இத்தகைய கணக்கெடுப்பு மிகவும் அவசியம், இது சமூகநீதி நடவடிக்கை என்று கூறியிருந்தார்.

 

 'Is this social justice?'- Ramadoss asked

 

அமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நான், ’’நகரப் பேருந்துகளில் மகளிரை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் திட்டம் சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு பயன்படுகிறது என்பதை கண்டறிந்து அதனடிப்படையில், திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்துவது தான் இதன் நோக்கம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கமும் இதுவே தான். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சமூகநீதியை வலுப்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். அதை செயல்படுத்த அரசு மறுப்பது ஏன்?  அதில் என்ன சிக்கல் உள்ளது?” என்று வினா எழுப்பியிருந்தேன்.

 

இது நடந்தது நவம்பர் 27-ஆம் நாள். அதன்பின் 4 நாட்கள் கழித்து இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை ஒன்றை தமிழக அரசு எடுத்திருக்கிறது.

 

அது என்ன நடவடிக்கையாக இருக்கும்? தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு ஆணையிட்டு விட்டதோ என்று தானே நினைக்கிறீர்கள். வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.... அது தான் இல்லை. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்துவதை நிறுத்தி விட்டார்கள் என்பது தான் அந்த நடவடிக்கை. சமூகநீதியை எப்படி பாதுகாக்கிறார்கள்' பாருங்கள்' என பதிவிட்டுள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்