Published on 27/07/2018 | Edited on 27/07/2018

கலைஞர் விரைவில் பூரண உடல்நலம் பெற்று குணமடைய வேண்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில்,
’’கலைஞர் விரைவில் உடல் நலம்பெற்று, மீண்டும் பழைய கம்பீர குரலோடு தமிழ் வசனங்கள் பேசி, தமிழகத்தில் மீண்டும் அரசியல் பணிகள் செய்ய, நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.’’