Skip to main content

'சொன்ன வார்த்தையில் பின் வாங்க மாட்டேன்' - நடிகை குஷ்பு பேட்டி

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

'I will not take back my words' - actress Khushbu interview

 

 

அண்மையில் வெடித்த நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா விவகாரத்தில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு ட்விட்டரில் ஒருவருக்கு 'சேரி' என்ற வார்த்தையை பதிவிட்டு சொன்ன பதில் பேசு பொருளாகி உள்ளது. அவரின் இந்த பேச்சுக்கு பல தரப்புகளில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு முன்னரே குஷ்புவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் குஷ்புவின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது.

 

இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு பேசுகையில், ''குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முவை தேர்ந்தெடுக்கும் பொழுது இதே காங்கிரஸ் தலைவர்கள் அவரை தீய சக்தி என்று சொன்னார்கள். அது ராஷ்டிரபதி அல்ல ராஷ்டி பத்தினி என்று சொன்னார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு புரிகிறதா? ஒரு இடத்தில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்து மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு போராட்டம் நடத்தினார்களா? நாங்குநேரியில் படிக்கிற பசங்களுக்குள் ஒரு பிரச்சனை நடந்தது. அப்பொழுது போராட்டம் நடத்தினார்களா? அங்கு போய் இவர்கள் பிரச்சனை பண்ணினார்களா? நேற்று முன்தினம் இரண்டு தலித் மக்களை பைக்கில் தூக்கிக் கொண்டுபோய் ராடால் அடித்திருக்கிறார்கள். அதற்கு ஏதாவது வருத்தம் தெரிவித்தார்களா? அங்கு போய் ஏதாவது மறியல் பண்ணாங்களா?

 

கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இந்த நவம்பருக்குள் தமிழகத்தில் மட்டும் 450 வழக்குகள் பதிவாகி இருக்கு தலித் மக்களுக்கு எதிராக நடந்து கொடுமைகளுக்காக. 450 சம்பவங்களுக்கு நான்கு தடவையாவது இவர்கள் எங்காவது போராட்டம் பண்ணாங்களா? இந்த மாதிரி கோஷம் போட்டார்களா? இல்ல பொம்மை எரிச்சீங்களா? குஷ்பு வீட்டில் போராட்டம் வச்சா இரண்டு நாள் பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற காரணத்திற்காக நீங்கள் இந்த மாதிரி செய்கிறீர்கள். உங்களுக்கு பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு. என் சார்பாக உங்களுக்கு வாழ்த்துகள். நான் தவறாக வார்த்தையை பயன்படுத்தவில்லை. எந்த அர்த்தத்தில் பயன்படுத்தினேன் என்று தெளிவாக சொல்லிவிட்டேன். அதற்கான விளக்கமும் கொடுத்து விட்டேன். யாருக்கும் பயந்து சொன்ன வார்த்தையை பின் வாங்குவது நான் கிடையாது'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கும் மத்திய அமைச்சர்?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Union Minister Nirmala Sitharaman contest in Puducherry

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் நட்சத்திர வேட்பாளராக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது

அதே சமயம் மீதமுள்ள மக்களவைத் தொகுதிக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க.விற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக நேற்று (03.03.2024) அறிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக புதுச்சேரிக்கு இன்று (04.03.2024) வருகை தந்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பா.ஜ.க.வினர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜகவினர் தெரிவித்த 3 வேட்பாளர்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரும் இடம் பெற்றிருந்த நிலையில், மற்ற இரு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

பதவியை ராஜினாமா செய்த ஜே.பி. நட்டா!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
JP nadda resigned from the post

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் நட்சத்திர வேட்பாளராக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து ராஜ்ய சபா சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜகத் பிரகாஷ் நட்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொண்டார்” என ராஜ்யசபா பொதுச் செயலாளர் பி.சி. மோடி தெரிவித்துள்ளார்.

அதே சமயம் மீதமுள்ள மக்களவைத் தொகுதிக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் ஜே.பி. நட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா போட்டியின்றி கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.