Published on 07/10/2018 | Edited on 07/10/2018
சென்னையில் நேற்று உயர்கல்வி மேம்பாடு குறித்து நடந்த கருத்தரங்கில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துணைவேந்தர் பணி நியமனத்தில் பல கோடிகள் புரண்டதாக தெரிவித்தார். துணை வேந்தர் பணி நியமனம் தகுதி அடிப்படையிலேயே நடக்க வேண்டும் ஆனால் இப்படி பல கோடிகள் வாங்கிக்கொண்டு துணை வேந்தர்களை நியமித்தது கண்டு வருத்தமடைந்தேன். அந்த நிலையை மாற்ற வேண்டும். இதுவரை தகுதி அடிப்படையில் 9 துணை வேந்தர்களை தான் நியமித்துள்ளேன் எனவும் கூறினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த.
இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தற்போது அளித்த பேட்டியில் தான் தகுதி அடிப்படையில்தான் முன்னாள் ஆளுநர் வித்யாசாகரரால் நியமிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.