'' I could not accept Vivek's passedaway '' - Actor Vadivelu tears

Advertisment

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

அவரின் மறைவுக்குப்பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்களும்நேரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு நகைச்சுவை நடிகர் வடிவேலுஅவரது கண்ணீர் அஞ்சலியைவீடியோ மூலம் தெரிவித்துள்ளார். ''பொதுநல சிந்தனைகொண்டவிவேக்கின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. விவேக்கின் ரசிகன் நான்.என்னைவிட எதார்த்தமாக எளிமையாகப் பேசக்கூடியவர். நான் மதுரையில் இருப்பதால் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தமுடியவில்லை. விவேக்கின் மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை'' எனக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.