Skip to main content

"இந்தியாவில் நம்பர் 1 முதல்வர் ஸ்டாலின்" - முதல்வரை வாழ்த்திய ஆளுநர் ஆர்.என் ரவி!!

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

'' I commend the Chief Minister of Tamil Nadu for his effective handling '' - Speech by the Governor of Tamil Nadu!

 

கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்பொழுது துவங்கியது. எப்பொழுதும் இசைத்தட்டு மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கப்படும் நிலையில், இந்த முறை நேரடியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழக அரசின் இசைக்கல்லூரி பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினர்.

 

புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை துவங்கினார். அப்பொழுது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மற்றும் மற்றும் விசிக எம்.எல்.ஏக்கள் ஆளூர் ஷநவாஸ், சிந்தனை செல்வன், செய்யூர் பாபு, திருப்போரூர் பாலாஜி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ''உருமாறிய கரோனா வைரஸின் சவால்களை எதிர்கொள்வதற்கு அரசு முழுமையாக தயாராக உள்ளது. கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தடுப்பூசி செலுத்தும் பணியை மக்கள் இயக்கமாக மாற்றி கரோனா இரண்டாம் அலையை திறம்பட கையாண்ட தமிழக முதல்வரை பாராட்டுகிறேன்.

 

மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி ஆக்சிஜன் மருந்துகள் கிடைப்பதை முதல்வர் உறுதி செய்துள்ளார். கரோனா நிவாரண நிதிக்கு 543 கோடி ரூபாயில்  541.64 கோடி ரூபாய் நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களையும் மறுசீரமைக்கத் தேசிய பேரிடர் நிவாரண நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையில் முழு கொள்ளளவு நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் இதுவரை 42.99 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 'இன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் இதுவரை 4,482 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடர்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது ''என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'ஆளுநருக்கு என் மீது பாசம் அதிகம்'-அமைச்சர் பொன்முடி பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
 'Governor has a lot of affection for me' - Minister Ponmudi's speech

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு ஆளுநர் அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் விழுப்புரம் கூட்டத்தில் பொன்முடி பேசுகையில், 'ஆளுநருக்கு என் மேல் ரொம்ப பிடிப்பு, பாசம் அதிகம். ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் எல்லாம் சொன்னதைப்போல நான் கொஞ்சம் சமத்துவக் கொள்கை, சமதர்மக் கொள்கை இதெல்லாம் கொஞ்சம் பேசுற ஆளு. மத்த அமைச்சர்களை விட நான் தான் அவரிடம் நேரடியாக எல்லாவற்றிலும் தொடர்புடையவன். அதனால் என் மேல அவருக்கு பாசம், பற்று, பிரியம் எல்லாம் இருந்தது. உச்சநீதிமன்றத்தை தீர்ப்பு வந்ததற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக என்னை டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதற்கு பிறகு மார்ச் மாதத்தில் உத்தரவு எல்லாம் வந்த பிறகு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அவர் உடனடியாக பார்த்து நான் அமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று சொல்லி இருந்தால் சரி. அதைதான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செய்ய வேண்டும்.

உண்மையான நிர்வாகத்தை நடத்துபவர் முதல்வர். ஆளுநர் பெயருக்கு நிர்வாகத்தை நடத்துபவர். கவர்னர் என்ன ஓட்டு போட்டா வந்தார். ஒரு நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மாநில அரசாங்கம் எதை சொல்லுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் அவருடைய பொறுப்பு. அதுதான் அரசியலமைப்பு சட்டம் சொல்லுவது. இன்றுகூட கேரளாவில் ஏழு அரசியலமைப்பு சட்டங்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் இருக்கிறார் என்று சொல்லி கேரளாவினுடைய முதல்வர் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார் என்று சொன்னால் இந்த ஆளுநர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் ஆட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்ற இந்த ஒன்றிய அரசை நீங்கள் தூக்கி எறிய வேண்டுமா வேண்டாமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.