
கடலூர் மாவட்டம் செல்லங்குப்பத்தில் குடும்பத் தகராறில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குழந்தை உட்பட 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாங்குளம் பகுதியில் தமிழரசி என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தமிழரசி சகோதரி மற்றும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்தது. இதன் காரணமாக தமிழரசி சகோதரர் தனலட்சுமி கணவர் சற்குரு பிரிந்து தமிழரசியுடன் வசித்து வந்துள்ளார். மேலும் சற்குரு மீது தனலட்சுமி புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தமிழரசி வீட்டுக்கு வந்த சற்குரு தனலட்சுமியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதை தடுக்கச் சென்ற தமிழரசி அவரது குழந்தைகள் ஆத்மி மற்றும் தனலட்சுமியின் குழந்தையின் மீதும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
மேலும் சற்குரு மீதும் அந்த பெட்ரோல் விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் தமிழரசியும் அவரது குழந்தையும் இறந்துவிட்டனர். தீவைத்து கொலை செய்த சற்குருவும் உயிரிழந்துள்ளார். அதோடு இல்லாமல் தனலட்சுமி சற்குருவின் நான்குமாத குழந்தையும் உயிரிழந்துள்ளது. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சொன்ன தகவலின் படி சற்குரு பெட்ரோல் ஊற்றியது தெரிய வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இறந்த உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.