husband  beaten broker who had married him because his wife had a dispute

விழுப்புரம் மாவட்டம் வடவாம்பழத்தைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் சக்திவேல். இவர் கூலி தொழில் பார்த்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி என்வருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சக்திவேல் - ஜெகதீஸ்வரி இருவருக்கும் அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் என்ற கல்யாண புரேக்கர் திருமணம் செய்துவைத்திருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில் கணவன் சக்திவேலுக்கும், மனைவி ஜெகதீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோன்று சம்பவத்தன்று இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிக் கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி ஜெகதீஸ்வரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் இருவருக்கும் வரன் பார்த்து திருமணம் செய்துவைத்த புரோக்கர் பெருமாளை தாக்கியுள்ளார். அரசமங்கலம் ரேஷன் கடையில் நின்றுக்கொண்டிருந்த அவரை சக்திவேல், “நீ தான எனக்குப் பெண் பார்த்து திருமணம் செய்து வச்ச, இப்போ பாரு என் மனைவி அடிக்கடி சண்டை போடுறா..” என்று ஆபாச வார்த்தையில் புரோக்கர் பெருமாளை திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புரோக்கர் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.