Skip to main content

“இரக்கப்பட்டு உதவி செஞ்சோம், ஏமாத்திட்டு போய்ட்டாங்க” - 500க்கும் மேற்பட்ட மக்கள் குமுறல்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

husband and wife absconded after buying crores of money name of more than 500 people financial institutions
கணவன் - மனைவி

 

நாகை அருகே நுண்கடன் நிதி நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்டவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு கணவன், மனைவி தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த ஒரத்தூர் ஊராட்சி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் காந்தி. இவரது மனைவி வித்யா. வித்யா அருகில் உள்ள நரியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். காந்தி பொரவாச்சேரியில் மரப்பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். வித்யா கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள பெண்களிடம், எங்களுக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவு செய்ய வேண்டும் என்றும் புது பட்டறை துவங்கப்போகிறோம் என்றும் பல்வேறு காரணங்களைக் கூறி உங்கள் பெயரில் நுண்கடன் நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுங்கள். அந்த கடனை நான் கட்டி விடுகிறேன் என்று சொல்லிக் கேட்டுள்ளார்.

 

அவர்களின் உடல்நிலையைக் கண்டு இரக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் கடன் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதேபோல் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் ஒரத்தூர், அகர ஒரத்தூர், வேர்க்குடி, பாப்பாகோவில், நிர்த்தனமங்கலம், நரியங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் 500க்கும் மேற்பட்டவர்களின் பெயரில் அரேஸ், பிங்கர், ஈஷாப், லெஷ்மி கடாட்ஷம், கிராமின் கோட்டா, உதயம், ஜோதி, எக்விடாஸ், பெல் ஸ்டார், சமஸ்தானம், பியூஷன், கிராம விடியல் உள்ளிட்ட பல்வேறு நுண்கடன் நிறுவனங்களில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

 

வித்யா அரசுப் பள்ளியில் சத்துணவுப் பணியாளராக இருந்ததால் அவர்களும் நம்பி தங்களது பெயரில் 5, 6 நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். மேலும் அப்பகுதி பெண்களிடம் இருந்து ரேசன் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ஏடிஎம் கார்டு அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு குழுத் தலைவியாகவும் செயல்பட்டு அவர்களுக்கு தெரியாமலேயே துணைக் கடன் வாங்கியும் மோசடி செய்துள்ளனர். 

 

husband and wife absconded after buying crores of money name of more than 500 people financial institutions

 

இந்த நிலையில் காந்தியும் அவரது மனைவி வித்யாவும் கடந்த வாரம் ஊருக்கு சென்றவர்கள் திரும்ப ஊருக்கு வரவில்லை. அப்போது அந்த வாரத்தில் நுண்கடன் நிறுவனங்களுக்கு பணம் கட்டாததால் அதன் ஊழியர்கள் பணம் வாங்கிக் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு வந்து பணம் கட்டச் சொல்லியுள்ளனர். அப்போது அந்த பெண்கள் வித்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது செல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் ஒவ்வொரு பெண்களும் வித்யா வீட்டிற்கு வர, அவர்கள் கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்களுடன் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. மேலும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் 500க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றி ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காந்தி, வித்யா வீட்டின் முன்பு திரண்ட கிராம மக்கள் மண்ணை வாரி இறைத்தும் சாபம் விட்டும் அழுது புலம்பியதோடு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மோசடி செய்த கணவன், மனைவி மீது புகார் அளித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'முதல்வர் விசாரிக்க வேண்டும்' - பெண் தற்கொலையில் சிக்கிய பரபரப்பு கடிதம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
'chiefminister should investigate'-a letter from a woman involved  incident

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்கொலை செய்துகொண்ட பெண் எழுதிய கடிதம் போலீசார் வசம் சிக்கியுள்ளது.

மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனி, விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜேந்திரன். இவருடைய 14 வயது மகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால் தான் சிறுவனை விடுவோம். இல்லையெனில் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விட்டனர்.

உடனடியாக இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் செந்தில்குமார், ரவுடி அப்துல் காதர், காளிராஜ், வீரமணி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கடத்தல் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தை நிகழ்த்திய முக்கிய நபர்களான ஹைகோர்ட் மகாராஜன் மற்றும் சூர்யா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியையும் போலீசார் தேடி வந்தனர்.

இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பி பெங்களூரில் பதுங்கி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெங்களூரிலிருந்து குஜராத் சென்ற நிலையில் சூர்யா குஜராத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களுடைய பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் மரணம் குறித்து விசாரிக்கத் தனிப்படை போலீசார்  குஜராத் விரைந்தனர்.

குஜராத் காந்திநகர் பகுதியில் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் தோட்டப் பகுதியில் விஷம் அருந்தி சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சூர்யா தற்கொலை குறித்து எழுதி வைத்துள்ள கடிதம் வெளியாகியுள்ளது. அதில், 'பள்ளி மாணவன் கடத்தல் சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும் தன் மீது மைதிலி ராஜலட்சுமி பொய்யான புகாரை கொடுத்திருக்கிறார். தனது கணவருக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இது குறித்து முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்; அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
nn

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் தாங்கள் தொடர்ந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என ஏழு நாட்கள் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற நடுவர் பரத்குமார் இரண்டு நாட்கள் எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.