Skip to main content

ஒருதுளிகூட மழை பொழியாதா நாட்கள் எத்தனை...? மோசமான வரலாற்றை படைக்க காத்திருக்கும் சென்னை!

Published on 16/06/2019 | Edited on 16/06/2019

சென்னை மாநகரமே தண்ணீர் இன்றி தவித்துவரும் நிலையில் தொடர்ந்து ஒருதுளிகூட மழையே பெய்யாத நாட்களின் எண்ணிக்கையில் சென்னை மாநகரம் மோசமான புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறது. 

 

chennai

 

சென்னையில் கடந்த 191 நாட்களாக ஒருதுளி கூட மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் பொழுதுதான் சென்னையில் கடைசியாக மழைபெய்தது. 2015 ஆம் ஆண்டில் தொடர்ந்து 193 நாட்கள் சென்னையில் மழை பெய்யாமல் இருந்ததுதான் மோசமான வரலாறாக இருந்தது.

 

chennai

 

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து தற்போது வரை 191 நாட்களாக ஒரு துளி மழைக்கூட பொழியாமல் இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இதேநிலைமை நீடித்தால் புதிய மோசமான வரலாறு படைக்கும் சென்னை என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. 

 

இந்தநிலை தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரலாற்றை சென்னை மாநகரம் படைக்கும். தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். விட்டால் ஒரு துளிகூட மழைபொழியாத நாட்களில் சென்னை இரட்டை சதம் அடித்துவிடுமோ என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் சமூக மற்றும் சூழியல் ஆர்வலர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Chance of rain in 13 districts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று (13.07.2024) இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம், ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

காவிரி விவகாரம்; கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Edappadi Palaniswami condemns Karnataka Congress government!

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி வீதம் ஜூலை 31 வரை தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் எண்ணங்களை கருத்திற்கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை கர்நாடக அரசு ஏற்காமல் முரண்டு பிடிப்பது ஏற்கத்தக்கதல்ல.

விளம்பர போட்டோ ஷூட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக முதல்வர், காங்கிரசின் தயவிற்காக தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது அவரின் தொடர் செயலற்றத்தன்மை மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேடையில் மட்டும் மாநில உரிமை பற்றி வாய் கிழிய பேசும் திமுக அரசின் முதல்வர் தன்னுடைய செயலற்ற தன்மையால், தமிழக மக்களின் வாழ்வோடு விளையாடி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

டெல்டா விவசாயிகள் நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக காவிரி விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெறுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.