Skip to main content

இதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசு அறிவித்திருந்த 144 தடை உத்தரவும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்களது வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்வதோடு, பல்வேறு நூதன தண்டனைகளையும் கொடுத்து வருகின்றனர். தற்பொழுது காவல்துறை சார்பில் இருந்து இந்த உத்தரவை கடைபிடிக்காதவர்களின் எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்