/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_513.jpg)
மதுரை மாவட்டம் சொக்கலிங்கர் நகர் 7ஆவது தெரு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (53). இவர் உறையூர் பகுதியில் திருவடி தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ராமகிருஷ்ணன் உறையூர் நவாப் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு லாட்ஜ் அறையில் தூங்கிய ராமகிருஷ்ணன் காலையில் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அவருடைய அறைக்கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனை பார்த்து சந்தேகமடைந்த லாட்ஜ் மேலாளர் சதீஷ்குமார் என்பவர் அறைக்கு சென்ற போது அங்கு துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த சதீஷ்குமார் உடனடியாக உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாட்ஜ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு ராமகிருஷ்ணன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
போலீசாரின் விசாரணையில் ராமகிருஷ்ணன் விஷம் குடித்து இறந்ததாக தெரிந்தது. இதையடுத்து போலீசார் ராமகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)