nn

வரும் 24 ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பொது இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தீபாவளி கொண்டாட்டத்திற்காக உற்சாகமாக தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்து தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்கி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் அக்டோபர் 25 ஆம் தேதி மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றுள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக வரும் 25ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.