
கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 31-ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல நேரடி வகுப்புகள் நடைபெறும். பொதுத் தேர்வு எழுத இருப்பதால் அவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் எனப் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக அனைத்து பி.இ, கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரியில், இளநிலை-முதுநிலை மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)