Skip to main content

“மனிதம் தாண்டி புனிதம் இல்லை” - இஸ்லாமியர்களுக்காக ஒருங்கிணைந்த மக்கள்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

Hindus, Christians and Muslims have all come together build new mosque

 

200 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் சிதிலமடைந்ததால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து புதிதாக ஒரு பள்ளிவாசலைக் கட்டியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ளது பனங்குடி கிராமம். இந்தக் கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தக் கிராமத்தில் மத அடிப்படையில் எந்தச் சண்டையும் ஏற்பட்டதில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இவர்களின் வழிபாட்டு தலங்களான கோயில், சர்ச், பள்ளிவாசல் என மூன்றும் அடுத்தடுத்து அமைந்துள்ளது. 

 

பனங்குடியில் உள்ள பள்ளிவாசல் 200 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. தற்போது அந்தப் பள்ளிவாசல் சிதிலமடைந்து காணப்படுவதால் அங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் அதே இடத்தில் புதிதாகப் பள்ளிவாசல் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து புதிய பள்ளிவாசல் கட்ட ஜமாத் தலைவர் முன்னிலையில் பனங்குடி கிராமத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, இந்தக் கிராமத்தில் பெருவாரியாக உள்ள இந்து மக்கள், கிறிஸ்துவ மக்கள் பங்களிப்புடன் ரூ. 70 லட்சம் செலவில் பிரமாண்டமான புதிய முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசல் கட்டப்பட்டது.

 

இதையடுத்து, பள்ளிவாசல் திறப்பு விழாவில் கிராம மக்கள் தலைமையில் இந்துக் கோயிலில் வழிபாடு செய்ததோடு, சீர்வரிசைத் தட்டுக்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று, மதநல்லிணக்கம் போற்றும் வகையில் கிராம மக்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். மேலும், ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்கள் கிராமத் திருவிழா போல் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

 

இவ்விழாவில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் அனைவருக்கும் கந்தரி என்னும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதில் ஜமாத்தார்களும் ஐயப்ப பக்தர்களும் பள்ளிவாசலில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் காட்சிகள், மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“400 இடங்கள் வென்றால் ஞானவாபி மசூதிக்குப் பதிலாக இந்து கோவில் கட்டப்படும்” - பா.ஜ.க முதல்வர் 

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
 Assam Chief Minister said temple will be built instead of Gnanawabi Masjid" -

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன் தினம் (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், மொத்தம் 7 மக்களவைத் தொகுதி கொண்ட டெல்லியில் ஒரே கட்டமாக மே 25ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் ஹர்ஷ் மல்கோத்ரா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து லஷ்மி நகரில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், “சச்சின் டெண்டுல்கரிடம் ஏன் இரட்டை மற்றும் மூன்று சதங்கள் அடித்தார் என்று கேட்பீர்களா? கடந்த மக்களவைத் தேர்தலில் 300 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்ற போது ராமர் கோவில் கட்டப்பட்டது. இப்போது, 400 இடங்கள் கிடைத்தால், மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியில் கிருஷ்ணர் கோவில் கட்டப்படும். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்குப் பதிலாக பாபா விஸ்வநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரமாண்ட கோவிலைக் கட்டுவோம். முகலாயர்களால் பரப்பப்பட்ட குழப்பத்தை நாமும் சுத்தம் செய்ய முடியும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஒரு காஷ்மீர் இந்தியாவிலும் மற்றொன்று பாகிஸ்தானிலும் உள்ளது என்று கூறினோம். பாகிஸ்தானுக்கு ‘ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ உள்ளது என்று நமது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. அது உண்மையில் நம்முடையது. தற்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஒவ்வொரு நாளும் போராட்டம் நடந்து வருகிறது. மேலும், மக்கள் தங்கள் கைகளில் இந்திய மூவர்ணத்தைப் பிடித்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மோடிக்கு 400 இடங்கள் கிடைத்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை இந்தியாவிற்கு கொண்டு வருவோம். 400 இடங்கள் கொண்ட எங்கள் திட்டங்களின் பட்டியலை நான் தொடர்ந்தால், காங்கிரஸ் ஐ.சி.யூவை அடையும்” என்று கூறினார். 

Next Story

கோயிலை இடித்து மசூதி கட்டியதாக வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
Rumors that the temple was demolished and a mosque was built; Fact finding team explanation

தென்காசியில் பழமையான இந்து கோயில் அரசின் உதவியுடன் இடிக்கப்பட்டு மசூதியாக மாற்றப்பட்டு உள்ளதாக காணொளி ஒன்று எக்ஸ் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இச்செய்தி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த காணொளியை குறிப்பிட்டு தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இது கோயில் அல்ல, தர்கா. தென்காசி அருகே பொட்டல்புதூரில் இஸ்லாமிய அறிஞர் முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானியின் நினைவாக கடந்த 1674 ஆம் ஆண்டு "முகைதீன் ஆண்டவர் தர்கா" கட்டப்பட்டது.

இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். திராவிடக் கட்டிடக் கலை அடிப்படையில் இந்த தர்கா கட்டப்பட்டுள்ளது. ஆனால் கோயிலை மசூதியாக மாற்றிவிட்டதாக வதந்தி பரப்பி வருகிறார்கள். வதந்திகளைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.