High Court hearing voluntary complaint against Rajesh Das

தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரின் அடிப்படையில், இந்தப் புகாரானது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

இதையடுத்து, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கசி.பி.சி.ஐ.டிஏ.டி.எஸ்.பிகோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கே இந்த நிலையாஎன, தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீதான புகாரைஇன்று (01.03.2021) பிற்பகல் தானாக முன்வந்து விசாரிக்க இருக்கிறது சென்னைஉயர்நீதிமன்றம். நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் இந்த வழக்கைவிசாரிக்க உள்ளார். மேலும் இன்று பிற்பகல் 2.15 மணிக்குஉத்தரவும் பிறப்பிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள்வெளியாகியுள்ளன.

ராஜேஷ் தாஸ் கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஆறு பேர் கொண்ட விசாகா குழுவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment