Skip to main content

இயக்குநர் ஷங்கர் மீதுள்ள வழக்கை தள்ளுபடி செய்த  உயர் நீதிமன்றம்!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

High Court dismisses case against director Shankar

 

இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைக்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர் கமல் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் தயாராகிவருகிறது. இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

 

இந்த வழக்கில் ஷங்கர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்துவிட்டார். இதை எதிர்த்து லைகா தரப்பில் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. இந்த வழக்கானது இன்று (08.07.2021) மீண்டும் தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, லைக்கா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்று கூறி, லைக்கா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

 

சார்ந்த செய்திகள்