High Court condemns Srirangam Rangarajan Narasimhan

சென்னை காபலீஸ்வரர் கோயிலின் மயில் சிலை காணாமல் போனது தொடர்பாக பிரபல தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக்கூடாது என ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை விதித்து கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மீறி சமூக வலைத்தளங்களில் ரங்கராஜன் நரசிம்மன் விரும்பத்தகாதவார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக கூறி வேணு சீனிவாசன் மீண்டும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக மன்னிப்பு கோரி இருந்தார்.

Advertisment

மீண்டும் எக்ஸ் வலைத்தளத்தில் கருத்துகளை பதிவு செய்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, மாலா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நீதிமன்றத்தின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டுள்ளதாக கூறிஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் அந்த தொகையை 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் பாலியல் தொழிலாளர்கள் குறிப்பிடக்கூடிய வார்த்தைகளை பயன்படுத்தியதே ஆட்சேபனைக்கு உரியது மற்றும் விரும்பத்தகாதது.

Advertisment

சனாதனத்தின் பாதுகவலர்கள் என்று கூறிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் என் அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் நாகரிகத்தையும் கண்ணியத்தையும் பேண வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்து 2 வாரங்களுக்கு ரங்கராஜன் நரசிம்மன் விலகி இருக்க வேண்டும்” என்று நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.