சேவலை விட நாய் மிக வலிமையானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. மிக வேகமாக ஓடக்கூடிய முயல்களையே நாய் விட்டு வைப்பதில்லை. அப்படிப்பட்ட இரண்டு நாய்களை, ஒரு சேவல் சண்டையிட்டு தனது தெருவைவிட்டே விரட்டி அடித்தது என்று கூறினால் அதை உங்களால் நம்ப முடிகிறதா?. கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவை பார்த்தீர்கள் என்றால் வாயடைத்து போய் விடுவீர்கள்.
Came across in Whatsapp ! pic.twitter.com/BgrUPZ5vyz
— T Muruganandham (@muruga_TNIE) February 11, 2020
ஒரு வீட்டின் வாசலின் முன்பு வைக்கப்பட்டுள்ள உணவை ஒரு நாயும், சேவலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அப்போது அந்த வழியாக வந்த நாய் சேவலுக்கு வைத்த உணவை எடுத்து சாப்பிடுகிறது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சேவல் நாயுடன் சண்டை செய்கிறது. இனம் இனத்தோடு சேரும் என்று கூறுவதைப் போல இரண்டு நாய்களும் இணைந்து கொண்டு சேவலை எதிர்க்கின்றன. ஆனால் சேவல் மனம்தளராமல் இறுதிவரை சண்டையிட்டு அந்த இரண்டு நாய்களையும் தன் தெருவை விட்டே விரட்டி விடுகிறது. இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.