/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/udha434.jpg)
வரும் அக்டோபர் 24- ஆம் தேதி அன்று தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தில் பொதுமக்கள் புத்தாடைகளை வாங்கவும், பட்டாசுகளை வாங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், 'உதவும் உள்ளங்கள்' என்ற தொண்டு நிறுவனம் சார்பில், ‘ஆனந்த தீபாவளி' என்ற தலைப்பில் தொடர்ந்து, 25வது ஆண்டாக நிகழ்ச்சி ஒன்றிற்கு நேற்று (16/10/2022) காலை, சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், நடிகைகள் தன்யா, வாணிபோஜன் மற்றும் நடிகர்கள் அஸ்வின், கருணாகரன் மற்றும் திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினர். பின்னர், வாணிபோஜன் உள்ளிட்டோர் மேடையில் நடனமாடினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கிருத்திகா உதயநிதி, "தீபாவளியைப் பசங்களுடன் கொண்டாடினோம். 18 ஆதரவற்ற இல்லகுழந்தைகளுடன் ஆனந்ததீபாவளியைக் கொண்டாடினோம். இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது முறையாகக் கலந்துகொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் கருணாகரன், "தீபாவளி வாழ்த்துகள். உதவும் உள்ளங்கள் 25 ஆண்டாக தொடர்ந்து, ஆனந்த தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். நிறைய குழந்தைகளை ஒரே இடத்திற்கு அழைத்து வந்து, சந்தோஷமான தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். இந்த உதவும் உள்ளங்களுக்கு, நம்மால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குஉதவ வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)