helmet

இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும்போது உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், பின்னால் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் மாவட்டந்தோறும் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் விழுப்புரம் நகர காவல்துறையும், போக்குவரத்து காவல் துறையும் இணைந்து ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், பாலமுருகன், போலீஸ் நண்பர்கள் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Advertisment

மேலும் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்களுக்கும் மற்றும் ‘ஹெல்மெட்’ அணிந்தவாறு பின்னால் அமர்ந்தவர்களுக்கும் போலீசார், பரிசு பொருளை வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.