Published on 04/12/2020 | Edited on 04/12/2020
கனமழை காரணமாக, தமிழகத்தில் விருதுநகர், இராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு இன்று (04/12/2020) பொது விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக அரசு. மேலும் இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகள் தவிர பிற பணிகளுக்கு வெளியில் செல்வதைத் தவிர்க்க பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் இன்று முழுவதும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை விமான நிலையத்தில் இன்று மதியம் 12.00 மணி விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தைப் பொறுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தரையிறக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.