Heavy rain lashed Chennai

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது.

இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டியில் இருந்து கத்தி பார நோக்கி செல்லும் ஜிஎஸ்டி சாலையில் ஒன்றரைகிலோ மீட்டர் ஒருத்திக்கு மழை நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சாலையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கனமழை காரணமாக ஆறு விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்திலேயே வட்டமடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.