Skip to main content

ஆளுநருக்கு எதிரான மனுவில் இன்று விசாரணை

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Hearing today in the petition against the governor

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனால் மீண்டும் பொன்முடி  சட்டப்பேரவை உறுப்பினர் பதவியைப் பெற்றார். தொடர்ந்து அவர் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி கடந்த 14 ஆம் தேதி (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதனையடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என கடந்த (17-03-24) அன்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதில் கடிதம் எழுதி இருந்தார். அதில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அறிவிப்பு

Published on 22/07/2024 | Edited on 23/07/2024
Transfer of continuing IAS officers; Tamil Nadu Government Notification

அண்மையாகவே தமிழகத்தில் பல்வேறு துறை ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்திய அறிவிப்பில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அறிவிப்பின்படி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆவடி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி ஆணையராக சுங்கபுத்திரா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி ஆணையராக ஸ்ரீகாந்த் ஐஏஎஸ், கடலூர் ஆணையாளராக அனு ஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அருங்காட்சியகம் இயக்குநர் பொறுப்பிற்கு கவிதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி ஆணையராக ரஞ்சித் சிங் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படியாக பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.  

Next Story

'ஒரு மாதத்திற்குள் பிரச்சினைகளைக் தீர்க்க வேண்டும்'- ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கம் கோரிக்கை

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
'Problems should be resolved within a month'- Retired Fair Price Shop Workers Association demands

சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில அமைப்பு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தில் மாநில அமைப்பாளர் துரை. சேகர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தங்கராசு அனைவரையும் வரவேற்றார்.  

இதில் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார்.  தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.ஜெயச்சந்திர ராஜா, மாநில இணை பொதுச் செயலாளர் சிவக்குமார், சுவாமிநாதன், விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.  ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இதனைத் தொடர்ந்து சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்படும் லாப நட்ட கணக்குகளை வைத்துக்கொண்டு கூட்டுறவும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணப்பயன்களை தடுப்பது கண்டிக்கத்தக்கது.  கூட்டுறவுத்துறை நியாய விலை கடை பணியாளர் ஓய்வுக் கால சலுகைகள் குறித்து கூட்டுறவுத் துறை ஆய்வு செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்த பலனும் ஊழியர்களுக்கு ஏற்படவில்லை.  ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பண பலன்கள் அவர்களுக்கு சென்றடையாவிட்டால் தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற நியாய விலை கடை பணியாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குள் கூட்டுறவுத் துறையில் ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் பிரச்சினைகளை கூட்டுறவுத்துறை தீர்க்க வேண்டும் இல்லையென்றால் செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் இது குறித்து போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்'' எனக் கூறினார்.