கிருஷ்ணகிரியை சேர்ந்த சின்னா, லட்சுமணன் என்கிற இருவர் இருசக்கர வாகனத்தில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வழியாக சென்றுள்ளனர். ஆம்பூர் அருகே ஒரு ஏ.டி.எம் மில் நின்று செலவுக்கு பணம் எடுக்க சென்றுள்ளனர். அவர்கள் ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுக்க என்டர் செய்துள்ளனர். வந்ததோ பத்தாயிரம் ரூபாய்.
அதைப்பார்த்து ஆனந்தமும், அதிர்ச்சியும் ஒருசேர அந்த இளைஞர்களை தாக்கியது. பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்த அந்த இளைஞர்கள் அவசரமாக வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக ஆற்காடு நகர காவல்நிலையத்திற்கு வந்து அங்கிருந்த அதிகாரிகளிடம், தகவலை கூறி தங்களிடமிருந்த பத்தாயிரம் ரூபாய்க்கான தாள்களை எடுத்து தந்துள்ளனர்.
அதனை பெற்றுக்கொண்டு அவர்களைப்பற்றிய தகவல்களை வாங்கிக்கொண்டு, அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளனர் போலீஸார். பணம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அந்த வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளனர் போலீஸார்.