Skip to main content

''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்!

Published on 25/09/2020 | Edited on 26/09/2020

 

'' He will come even if he is called now ... '' - Kamal melted with memory !!

 

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல், நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளன நிலையில், அவரது உடல் தற்பொழுது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வீடியோ வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் எஸ்.பி.பி உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதில், "என்னுடைய வெற்றி, தோல்விகளுக்கு பாராட்டுதல்களையும், தவறு இருபின் சுட்டிக்காட்டவும் செய்பவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் எஸ்.பி.பி. எப்படி என் சகோதரர்கள் சாருஹாசன், சந்திரஹாசன் ஆகிய இருவரும், நான் செய்யும் தவறின்போதும், பாராட்டுக்குரிய விஷயங்களின் போதும் தட்டிக் கொடுப்பார்களோ, அதேபோல் இவரும் தட்டிக் கொடுப்பார். எனக்காக அழுபவர்களில் இவரும் ஒருவர். என்னைப் பற்றி யாராவது புகழ்ந்து பேசினால் ஆனந்தக் கண்ணீர் விடுபவர்களில் ஒருவர் எஸ்.பி.பி. அவரை அழ வைக்க வேண்டும் என்றால் என்னைப் பற்றி புகழ்ந்து பேசினாலே போதும்.

அவர் ஒல்லியாகதான் இருந்தார். பின்னாட்களில் அவர் உடல் பெரிதானது. ஆனால் அவர் உடல் மட்டுமல்ல அவரது மனதும் பெரியது. நான் பாடும் பொழுது என் அருகில் இருந்து தவறைச் சுட்டிக்காட்டி மீண்டும் பாடச் சொல்வார்.
 

Ad

 

இப்ப கூப்பிட்டால் கூட வந்து விடுவார். அவர் என் உருவத்திலே கூட இருக்கிறார். இப்போது என் மொபைல் ஃபோனை எடுத்தால் கூட அவரைப் பார்க்க முடியும். அவரைப்பற்றி நிறைய ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் வெறும் பாடகராக  மட்டும்  இருந்துவிடக் கூடாது எனவேதான், அவரை நடிக்கவும் அழைத்தேன். எனக்காக தெலுங்கில் பின்னணிப் பேசியுள்ளார். அவருடனான எனது முதல் சந்திப்பு, 'ஆயிரம் நிலவே வா' தான். அந்தப் பாடலைப் பாடியவரை நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது எளிதாக நடந்து விட்டது. உண்மையிலேயே நானும் அவரும் இந்த அளவுக்குப் பழகுவோம் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்றார் உருக்கமாக.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பழம்பெரும் நடிகர் அடடே மனோகர் மறைவு - திரையுலகினர் இரங்கல்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
veteran actor adade manohar passed away

மேடை நாடகங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் அடடே மனோகர். கிட்டத்தட்ட 3,500க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ள இவர், 6 நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தும் உள்ளார். கிரேஸி மோகன் மற்றும் எஸ்.வி சேகர் இயக்கிய நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். 1986 மற்றும் 1993ஆம் ஆண்டில் அன்றைய டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'அடடே மனோகர்’ என்ற தொடரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

திரைப்படங்களிலும் வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததோடு, அந்நியன் உட்பட 35 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர், நேற்று (27.02.2024) இரவு காலமானார். இவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

பிரபல பாடகர் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
prime minister narendra modi condolence to Ghazal singer Pankaj Udhas passed away

பிரபல கஸல் பாடகர் பங்கஜ் உத்வாஸ் பாலிவுட்டில் பல படங்களுக்குப் பாடியுள்ளார். திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது 2006 ஆம் ஆண்டு வழங்கியது. குஜராத்தை சேர்ந்த அவர் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (26.02.2024) பங்கஜ் உத்வாஸ் (72) இறந்துள்ளார். இவரது மறைவு இசைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி பதிவு பகிர்ந்து வருகின்றன. 

அந்த வகையில் பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில், “பங்கஜ் உத்வாஸின் இழப்பிற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். அவரது பாடல் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. அவரது கஸல்கள் ஆத்மாவுடன் நேரடியாக பேசுகின்றன. அவர் இந்திய இசையின் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தார். அவரின் மெல்லிசை பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டியது. பல ஆண்டுகள் அவருடனான எனது பல்வேறு உரையாடல்களை நினைவுகூர்ந்தேன். அவரது இடம் இசை உலகில் ஒருபோதும் நிரப்ப முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.