கடந்த 16.3.2018 ம் தேதி இரவு பண்ருட்டி அருகே புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டரகோட்டை மெயின் ரோட்டில் வாசித்து வந்த முனுசாமி மனைவி சின்னபொன்னு(80)
என்பவரை நகைக்காக கொலை செய்த வழக்கில்
புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசன் புலன் விசாரணை மேற்கொண்டு கொலை குற்றவாளி செல்வம்( 46)
த/பெ சாம்பசிவம்
பெருமாள்கோயில் தெரு,
அங்குசெட்டிபாளையம்
பண்ருட்டி
சத்யா( 35)
க/பெ செல்வம்
அங்குசெட்டிபாளையம்
இவர்களை கைது செய்தனர். பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கைப்பற்றி குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மூதாட்டி
சின்னபொன்னுவை கொடூரமான முறையில் கொலை செய்ததால் இவரின் குற்ற செய்கையை கட்டுபடுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டனர். இதன் பேரில் குற்றவாளி செல்வம் ஒராண்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.