ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சேலம் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ரயிலில் அப்பெண் சென்றுள்ளார். அப்பொழுது ரயில் சேலம் அருகே வந்து கொண்டிருக்கும்பொழுது அவர் படுத்திருந்த பெர்த்திற்கு மேல் பெர்த்தில் படுத்திருந்த நபர் ஒருவர் கீழே இறங்கி அப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து இளம்பெண் கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதனால் விழித்துக் கொண்ட சக பயணிகள் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை சேலம் இருப்புப்பாதை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சையது இப்ராஹீம் என்றும் சேலம் அரசு கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியரை சிறையில் அடைத்தனர்.