Advertisment

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன.

இதன் ஒரு நடவடிக்கையாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, (மார்ச் 22) மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Hand Wash in marriage

Advertisment

மக்கள் ஊரடங்கையடுத்து இன்று தமிழகம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. திருச்சியில் மத்தியபேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

பேருந்து, ஆட்டோக்கள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதால் திருச்சி மாநகர் முழுவதும் வெறிச்சோடிக்கிடக்கிறது.

சுயஊரடங்கு நடைபெறும் இன்று முகூர்த்த தினம் என்பதால் நிறைய திருமணங்கள் திருச்சியில் நடைபெற இருந்த நிலையில் இன்று 12 திருமணங்கள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மலேசியாவில் இருந்து மணமகன் வர முடியாத நிலையில் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

Hand Wash in marriage

இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் திருச்சியில் சில திருமணங்கள் அதிகாலையிலே நடைபெற்றது. குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று அதிகாலையிலே 4.30 மணிக்கு ஆரம்பித்து காலை 7.00 வரை நடைபெற்றது.

இந்த மண்டபம் 1500 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடிய பிரமாண்ட இந்த மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு 100 க்கு குறைவானவர்களே கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்பதற்கு சந்தனம், பன்னீர் கொடுப்பது வழக்கம். ஆனால் இங்கே திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் உள்ளே நுழையும் இடத்தில் கை கழுவும் ஆயில் ஹேண்ட் வாஷ், சோப்பு ஆயில் கொடுத்து கழுவிய பின்னரே திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.