style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

#கோ பேக் மோடி, #கோ பேக் அமித்ஷா வரிசையில், நேற்றைய தினம் #கோ பேக் ஸ்டாலின், # வெல்கம் ஸ்டாலின் என்ற ஹாஷ்டாக்குள் டிவிட்டரில் டிரெண்டானது.

பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக வருகையின் போது, அவர்களுக்கு எதிராக #கோ பேக் மோடி, #கோ பேக் அமித்ஷா என்ற ஹாஷ்டாக்குகள் தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்டானது. இதற்கு திமுகவின் ஐடி டீமே காரணம் என பரவலாக கூறப்பட்டது.

Advertisment

இந்நிலையில், நேற்று அதே போல் லண்டன் சென்றிருந்த மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவதையொட்டி, பா.ஜ.கவினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

#GoBackStalin என்ற ஹாஷ்டாக் தேசிய அளவிலான டுவிட்டர் டிரெண்டில் இடம் பிடித்தது. இதற்கு போட்டியாக #WelcomeStalin என்ற ஹாஷ்டாகை திமுகவினர் தேசிய டிரெண்டாக மாற்றினர்.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலளார் எச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில்,

பிறர்க்கின்னா முற்பகல் செயின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் - வள்ளுவர். தன் வினை தன்னைச் சுடும் என மு.க.ஸ்டாலினுக்கு #GoBackStalin என்ற ஹாஷ்டாக் தேசிய அளவில் பாஜகவினரால் ட்ரெண்டானது குறித்து சூசகமகா தெரிவித்துள்ளார்.