Skip to main content

ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதில் சந்தேகமா? சேலம் கல்லூரி சேவை மையத்தை அணுகலாம்!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020
students guidance

 

அரசுக்கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், சேலம் அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள சேவை மையத்தை நேரில் அணுகி விளக்கம் பெறலாம். 

 

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் முதல்முதலாக, அரசு கலைக்கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்படுகிறது. ஜூலை 20ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கி நடந்து வருகிறது. ஆன்லைன் விண்ணப்ப பதிவில், மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெளிவுபடுத்த, 38 மாவட்டங்களிலும் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. 

 

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை, சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.

 

ஆன்லைன் விண்ணப்ப பதிவில் ஏற்படும் சந்தேகங்களையும், தேவைப்படும் விவரங்களையும் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள பிளஸ்2 மாணவர்கள் இந்த சேவை மையத்தை அணுகலாம்.  இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் கூறுகையில், ''ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யப்படுவது என்பது இதுதான் முதல்முறை என்பதால், மாணவர்களின் நலன் கருதி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. 

 

எந்த இணையதள முகவரியில் விண்ணப்பிப்பது, தேவைப்படும் சான்றிதழ்கள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகவல்கள் குறித்த விவரங்களை இந்த சேவை மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். 

 

கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவு, குறியீட்டு எண், மாணவர்களுக்கு உள்ள சலுகைகள் உள்ளிட்ட விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அனைத்து வேலை நாள்களிலும் இம்மையம் செயல்படும்,'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பொதுத்தேர்வு தொடங்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
District Education Officer suspended before public examination

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

திட்டமிட்டபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கல்வித்துறையில் இருக்கக்கூடிய அலுவலர்களுக்கு ஆயத்தப் பணிகளுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வு செயல்பாடுகளில் சுணக்கமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை சஸ்பெண்ட் செய்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான பொதுத்தேர்வு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யாமல் சுணக்கம் காட்டியதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.