Skip to main content

நெசவுத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்வு...! மறுபரிசீலனை செய்ய மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

GST for weaving industry Tax hike ...! MNM Request for Reconsideration!

 

நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயமும் கைத்தறி நெசவுத் தொழிலும்தான். விவசாயிகளின் கடும் எதிர்ப்பினாலும், ஓராண்டு தொடர் போராட்டத்தினாலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் சூழல் உருவாகியுள்ளது. விவசாயிகள் போராட்டமே இன்னும் முழுமையாக முடிவடையாத சூழலில், நெசவாளர்களின் வாழ்க்கையைச் சிக்கலுக்குள்ளாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை மக்கள் நீதி மய்யம் கண்டித்திருக்கிறது. 

 

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர் கோபிநாத், “2017ஆம் ஆண்டு அமலுக்கு வந்த GST வரியில் நெசவுத்தொழிலுக்கு 5 சதவீதம் GST வரி நிர்ணயிக்கப்பட்டது. இப்போது மீண்டும் `GST விகிதாச்சாரம் மாற்றம்' (Change in GST Rate) என்னும் முறையில், வரும் ஜனவரி மாதம்முதல் 12 சதவீதமாக உயர்த்த முடிவுசெய்து, ஒன்றிய அரசால் அரசாணை (எண்:CG-DC-E-18112021-231253) வெளியிடப்பட்டுள்ளது. இது 140 சதவீத வரி உயர்வாகும். 

 

2017ஆம் ஆண்டு 5 சதவீதமாக அறிவிக்கப்பட்ட GST வரியின் காரணமாக, நெசவுத் தொழிலைத் தொடர முடியாமல் சிறு மற்றும் குறு நெசவாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டனர். இப்போது மீண்டும் GST வரியை உயர்த்தி நெசவுத்தொழிலை அதலபாதாளத்தில் தள்ளிவிடும் ஒன்றிய அரசின் முடிவு, எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. 

 

கரோனா, மழை வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களால் நெசவுத்தொழிலானது ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், GST வரி உயர்வானது இன்னும் கடுமையான பாதிப்பை உருவாக்கும். இதனைக் கருத்தில்கொண்டு, 18 நவம்பர் 2021 அன்று ஒன்றிய அரசு வெளியிட்ட GST வரி உயர்வு அரசாணையை மறுபரிசீலனை செய்து, வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசின் இந்த முடிவை எதிர்த்து மாநில அரசானது முறையீடுகள் செய்து வரி உயர்வைத் திரும்பப் பெறவைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”  என்று  வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அனைத்து பால் கேன்களுக்கும் ஜிஎஸ்டி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
'GST for all milk cans' - Nirmala Sitharaman announcement

டெல்லியில்  53 வது ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டம் நடைபெற்ற நிலையில் கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே சீரான 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்கு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே வகையான ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் கேன்கள் மட்டுமல்லாது அட்டைப்பெட்டிகள், சோலார் குக்கர்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சேவைகளை பொறுத்தவரை நடைமேடை சீட்டு உள்ளிட்ட அனைத்து விதமான ரயில்வே சேவைகளுக்கும் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, நடைமேடை சீட்டு, பொருட்களை வைத்திருக்கும் ஸ்டோர் ரூம் உள்ளிட்ட சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் தங்கும் விடுதி கல்வி நிறுவனங்களுக்கு வெளியே இருந்தாலும், மாத வாடகை 20 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருந்தாலும், மாணவர்கள் 90 நாட்கள் தொடர்ச்சியாக அங்குத் தங்கினால் அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தக் கூட்டத்தில் மத்திய பட்ஜெட் தொடர்பாகவும் மாநில நிதி அமைச்சர்களுடனும் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் அளித்துள்ளனர். தமிழக அரசின் சார்பாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று தமிழகத்தின் கோரிக்கைகளை நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.

Next Story

ஜி.எஸ்.டி. செலுத்தும்படி பிறப்பித்த ஆணைக்கு உயர்நீதிமன்றம் தடை!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
The High Court bans the order issued to pay GST!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TANGEDCO) என்பது மின் உற்பத்தி, பகிர்மானம், கொள்முதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து உத்தரவுகளை பிறப்பிக்கும். அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை வசூலிக்கப்பட்ட இந்தக் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியாக ரூ.6.97 கோடி செலுத்தும்படி ஜி.எஸ்.டி. கூடுதல் இயக்குநர் மே 6 ஆம் தேதி (06.05.2024) தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதனையடுத்து இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும், மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சத்தயநாரயணா பிரகாஷ் அமர்வில் இன்று (29.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். அதன்படி அவர் வாதிடுகையில், “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அரசு அளிக்கும் நிதியைக் கொண்டு செயல்படுகிறது. எனவே இந்த ஆணையம் விதிக்கும் கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் அனைத்தும் அரசுக்கு செலுத்தப்படுகிறது. அதற்கு வரி விதிக்க முடியாது. எனவே இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரூ.6.97 கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்தும்படி ஜிஎஸ்டி கூடுதல் இயக்குநர் பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி ஜி.எஸ்.டி கூடுதல் இயக்குநருக்கும், கூடுதல் ஆணையருக்கும் உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூலை 1 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்.