Skip to main content

சக ஆசிரியர்களை ஆபாசமாக திட்டிய அரசுப்பள்ளி தலைமையாசிரியர் 

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

Govt school headmaster who bad words fellow teachers

 

கிருஷ்ணகிரி அருகே, சக ஆசிரியர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டிய புகாரின் பேரில், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார்.  

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சிகரலப்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், அத்திமரத்துப்பள்ளத்தைச் சேர்ந்த கவுதம் (17) என்ற மாணவன், பிளஸ்2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில், பள்ளியில் திருப்புதல் தேர்வு நடந்தது. அப்போது கவுதம், பக்கத்தில் இருந்த மாணவனைப் பார்த்து தேர்வு எழுதி இருக்கிறார்.

 

இதைப் பார்த்துவிட்ட தேர்வுக்கூட கண்காணிப்பில் இருந்த ஆசிரியர், பள்ளியின் தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், கவுதமிடம் மறுநாள் வரும்போது பெற்றோரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். அதன்படி, பள்ளிக்கு மாணவனின் தாயார் வந்துள்ளார். வகுப்பறையில் உங்கள் மகன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்று திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவன் கவுதம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தற்கொலைக்கு பள்ளி தலைமை ஆசிரியர்தான் காரணம் எனக்கூறி கவுதமின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.  

 

பிரச்சனையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தலைமை ஆசிரியர் எட்வர்டு ராஜ்குமார் கட்டாய மருத்துவ விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டார். மருத்துவ விடுப்பில் இருந்த அவர், ஏப். 6 ஆம் தேதி பள்ளிக்கு வந்து, இங்கு நான்தான் தலைமை ஆசிரியர் என்பதை மறந்துவிட்டீர்களா? எனக்கூறி, சக ஆசிரியர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஆத்திரத்தில் இருந்த அவர், தலைமை ஆசிரியர் அறையில் இருந்த மேஜை, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளார். இதுகுறித்து  தகவல் அறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக எட்வர்ட் ராஜ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.