Skip to main content

            "ஆளுநர் மாளிகை ஊழலுக்கு உடந்தையாக உள்ளது"-  முதலமைச்சர் நாராயணசாமி!

Published on 14/10/2018 | Edited on 14/10/2018

 

ki


புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி,   " பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விவசாயிகள், மீனவர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. 


இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே இதற்கெல்லாம் காரணம்.  ரபேல் போர் விமான ஊழல் குறித்து பிரதமர் எந்தவித பதிலும் கூறாமல் மௌனம் காத்து வருகிறார். இதில் பிரதமர் மோடிக்கு தொடர்புள்ளதாலேயே அமைதியாக இருக்கிறார் "  என மத்திய பா.ஜ.க அரசு மீது அடுக்கடுக்கா குற்றம் சாற்றினார். 


மேலும் " உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளை மதிக்காமல் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற தேவநீதிதாஸை மீண்டும்  தன்னுடைய ஆலோசகராக  நியமித்துள்ளார். இது அதிகாரத்தை மீறி கிரண்பேடி செயல்படுகிறார்.  இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவிக்க உள்ளோம்" என்றவர்,   


"துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது. ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சொந்த நலனுக்காக சிஎஸ்ஆர் நிதியை தன்னிச்சையாக வசூல் செய்து, செலவு செய்து வருகின்றனர். இதற்கு கிரண்பேடி பொறுப்பேற்க வேண்டும்.  இதுதொடர்பாக கிரண்பேடி  சிஎஸ்ஆர் குழுவுக்கு தகவல் அளிக்க வேண்டும். கிரண்பேடிக்கோ, 
 அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கோ சிஎஸ்ஆர் நிதி வசூல் செய்ய அதிகாரமில்லை. ஆளுநர் அலுவலகத்திலிருந்து சிஎஸ்ஆர் நிதி கேட்டு தொழில் நிறுவனங்கள் மிரட்டப்படுகின்றன"  என கிரண்பேடி மீது பகிரங்கமாக புகார் கூறினார்.

 

அதேசமயம் நாராயணசாமியின்  குற்றச்சாற்றுக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, " புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளாக வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை செய்யவில்லை.  தற்போது பருவமழை நெருங்கும் நிலையில் அதன் பாதிப்புகளை  எதிர்கொள்ள தொண்டு நிறுவனங்கள் மூலமும், தொழில் நிறுவனங்கள் மூலமும் 25 வழித்தடங்களில் 84 கி.மீ தொலைவிற்கு வாய்க்கால்கள் தூரவாரப்பட்டுள்ளது.  தொண்டு செய்ய விரும்புவோர் அப்பணிகளை மேற்கொண்டனர். 


இதுவரை அதற்காக ஆளுநர் மாளிகை மூலம் ஒரு காசோலை கூட பெறப்படவில்லை.  தூர்வாரப்படுவதற்கான நிதி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்பட்டு வருகின்றது.  நான் துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து சென்றாலும் கூட புதுச்சேரி தொடர்ந்து நீரின்றி தவிக்கும் மாநிலமாக மாறாது. நிறுவனங்கள் அளித்த நிதி சிஎஸ்ஆர் திட்டத்தில் வராது. எனது வேண்டுகோளின்படியே பலரும் நேரடியாக தூர்வாருவோருக்கு பணம் தந்துள்ளனர்.  நாங்கள் பணம் பெறவில்லை. வரும் காலங்களிலும் பலரின் நிதி உதவியுடன் தூர்வாரும் பணி தொடரும் " என விளக்கம் அளித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இந்த ஆட்சி குறைப் பிரசவ ஆட்சியாகத்தான் இருக்கும்' - நாராயணசாமி பேச்சு

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
 puducherry former cm Narayanasamy speech

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

நாளை பிரதமர் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது எனப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி 400 இடங்களுக்கு மேல் பெறுவோம் என்று சொன்னவர் இப்பொழுது 240 இடங்களுக்கு பாஜக வந்த பிறகு, தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். இந்த ஆட்சி குறைப் பிரசவமாகத்தான் இருக்கும். ஐந்து ஆண்டு காலம் இந்த ஆட்சி நடைபெறாது. சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் அனுபவம் மிக்க அரசியல்வாதிகள். நரேந்திர மோடியினுடைய சர்வாதிகாரப் போக்கிற்கும் அவர்களுக்கும் ஒத்து வராது. ஆகவே இந்த ஆட்சி வெகு விரைவில் கலைந்து விடும். நரேந்திர மோடியைக் கூட்டணிக் கட்சிகளே வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்'' என்றார்.

Next Story

'இதுவே ஆட்சி கவிழ்ப்புக்கு வித்திடும்' - நாராயண சாமி கருத்து

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Narayanasamy opined that this will be the seed for the overthrow of the government

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (15.02.2024) தீர்ப்பு வழங்கியுள்ளது.

'அரசை கணக்கு கேட்கும் உரிமை, நாட்டு மக்களுக்கு உள்ளது எனப் பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. இந்த திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப்பிரிவு 19-ன் கீழ் உட்பிரிவு 1 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் நன்கொடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Narayanasamy opined that this will be the seed for the overthrow of the government

இந்த தீர்ப்பை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலரும் வரவேற்று வருகின்றனர். இந்தநிலையில், இது குறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ள கருத்தாவது, 'ஒரு அரசியல் கட்சிக்கு நிதி கொடுப்பவர்கள் அந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. அந்த அரசியல் கட்சியினுடைய அனுதாபிகள் என்றும் சொல்ல முடியாது. அவர்கள் அந்த அரசியல் கட்சிக்கு நிர்ப்பந்தம் காரணமாக அல்லது சலுகைகள் பெறுவதற்காக தேர்தல் நிதி கொடுக்கலாம். அதனால் அவர்கள் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு வைக்கும் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

பணத்தை வைத்து ஆளுங்கட்சியானது தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்வதற்கு இது வித்திடுவதாக அமையும். அதற்காகத்தான் உச்சநீதிமன்றம் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு நன்கொடை என்பது வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதை வரவேற்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.