Skip to main content

ஆளுநரின் தாமதம்; தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடையில்லாத சூழல்

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

Governor's delay; Unrestricted environment for online gambling in Tamil Nadu

 

கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

 

இதன்பின் நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஆன்லைன் சூதாட்ட விளைவுகளை ஆராய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஜூன் மாதம் அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 26-இல் தமிழக அமைச்சரவை ஆன்லைன் சூதாட்டத்திற்கான அவசர தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, ஆளுநரும் ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். 

 

இச்சட்டம் நேற்றுடன் 60 நாட்கள் முடிந்து காலாவதியானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட நிரந்தர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காததால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கு தடையில்லாத சூழல் நிலவுகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வெள்ள பாதிப்புகள் குறித்த ஆலோசனையில் மாநில அரசு பங்கேற்கவில்லை; ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
The State Government did not participate in the South District Flood Impacts Consultation; Governor's House Allegation

கன்னியாகுமரி ,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிக கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் படிப்படியாக சீரடைய தொடங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் நடத்திய வெள்ள பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என குற்றச்சாட்டை தமிழக ஆளுநர் மாளிகை முன் வைத்துள்ளது.

இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் கிண்டியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள், ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்பு படை, விமானப்படை, ரயில்வே துறை உயர் அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் மாநில அரசும் அதன் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. மழை பாதிப்பால் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளது, மாநில அரசு அழைத்தவுடன் மீட்பு நடவடிக்கைகளை செய்ய மத்திய அரசு துறையில் தயாராக உள்ளதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், கூட்டத்தில் பங்கேற்ற சில மத்திய அமைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் மீட்புகளை மேற்கொள்வது தொடர்பாக தெளிவற்ற நிலை இருப்பதாக கவலை தெரிவித்தனர் என்றும் ஆளுநர் மாளிகை சுட்டிக்காட்டி உள்ளது.