Skip to main content

உள்நோக்கத்தோடு பேசுகிறார் ஆளுநர்... பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றச்சாட்டு!

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

Governor speaks with intent ... Popular Front of India

 

அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் பேசுவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு விமர்சித்துள்ளது.

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (06/05/2022) காலை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய 'THE LURKING HYDRA' என்ற புத்தகம் சிறந்த ஆவணமாக இருக்கும். இந்திய ராணுவத்தின் சிறப்பு குறித்த புத்தகம் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமை, அரசியல்- மாணவர் இயக்கம் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். நாட்டை சீர்குலைப்பதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நோக்கம். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்படுகிறது. 

 

அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுவதை ஏற்க முடியாது. பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், அதற்கான பதிலடியை அவர்கள் பெறுவார்கள்" என்று கூறியிருந்தார்.

 

Governor speaks with intent ... Popular Front of India

 

தமிழக ஆளுநரின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, 'அரசியல் உள்நோக்கத்துடன் பேசிவரும் ஆளுநர், தொடர்ந்து தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்று விமர்சித்துள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷேக் முகமது அன்சாரி, ''ஆளுநரின் பேச்சு தமிழக அரசுக்கு மேலும் ஒரு அவதூறை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனே ஆளுநரை திரும்ப பெற வேண்டும்'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு

Published on 02/11/2023 | Edited on 03/11/2023

 

One more petiOne more petition in Supreme Court against Tamil Nadu Governortion in Supreme Court against Tamil Nadu Governor

 

சுதந்திரத்திற்காகவும் போராடிய சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவரும் நிலையில், தமிழக ஆளுநருக்கு எதிரான குரல்கள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு சபை அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்களில் தேவையின்றி ஆளுநர் தலையிடுகிறார். அரசு நியமித்த தேர்வுக்குழு பரிந்துரைப்படியே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் - கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு 

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Black Flag Demonstration Against Governor-Marxist Communist State Secretary K. Balakrishnan Announcement

 

சுதந்திரத்திற்காகவும் போராடிய சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவரும் நிலையில், தமிழக ஆளுநருக்கு எதிரான குரல்கள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. சமீபமாக ஆளுநரின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் மறுத்துள்ளதால், நாளை அவர் பங்கேற்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வரும் ஆளுநருக்கு எதிராக நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் முடிவுகளுக்கு தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதற்கும், விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுப்பதைக் கண்டித்தும் இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.