நாடு முழுவதும்புதிய வருடத்தை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இன்று நள்ளிரவு தொடங்கவுள்ள ஆங்கிலப் புத்தாண்டுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “என் அன்பிற்குரியதமிழக சகோதர சகோதரிகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள்.புத்தாண்டு நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கம், வெற்றியைத்தரட்டும். நமது நாடு 2023 ஆம் ஆண்டில் நம்பிக்கையுடனும்அபரிமிதமான தைரியத்துடனும் நுழைகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.