அரியலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்தார்.
மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
காட்டுப்பிரிங்கியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் இயங்கும் இ-சேவை மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து காட்டுப்பிரிங்கியம் ரேஷன் கடையில் வினியோகிக்கப்படும் அரிசியின் தரத்தை ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து அரியலூர் அரசு விருந்தினர் மாளிகையில், அனைத்து அரசு அலுவலர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்த விளக்க தொகுப்பினை கவர்னர் பார்வையிட்டார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.