'Gover 'Government should run Kaniyamoor school'-public interest case in Supreme Court!nment should run Kaniyamoor school'-public interest case in Supreme Court!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவைத் தீக்கிரையாக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணை நடத்தி வருகிறது. கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியை மறு பள்ளியை சீரமைப்பது தொடர்பாக 10 நாட்களில் ஆட்சியர் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பள்ளியை சீரமைக்க அனுமதி வழங்கி இருந்தார்.

Advertisment

இந்நிலையில் கனியாமூர் பள்ளியை தமிழக அரசே எடுத்துநடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் கட்சி தலைவர் எல்.எல்.ரவி என்பவர் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த பொதுநல வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்.எல்.ரவி சார்பில் தொடுக்கப்பட்டுள்ள அந்த பொதுநல வழக்கின் மனுவில், ''முதல் உயிரிழப்பு சம்பவத்தின் பொழுதே பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கைஎடுத்திருந்தால் ஸ்ரீ மதி உயிரிழந்திருக்க மாட்டார். சக்தி பள்ளியில் படித்த மாணவர்களை மற்ற பள்ளிகள் ஏற்க மறுக்கின்றனர். எனவே அந்த பள்ளியில் தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.