Skip to main content

காசோலை மோசடி வழக்கு; அரசுப் பள்ளி ஆசிரியைக்கு சிறைத் தண்டனை 

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

government school teacher cheque case in trichy 

 

காசோலை மோசடி வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த 2019ம் ஆண்டு திருச்சி லால்குடி, வாளாடியைச் சார்ந்த சேகர் என்பவரது மனைவி சித்ரா என்பவர் 3 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை கடனாக வாங்கியிருந்தார். சித்ரா, திருச்சி லால்குடி மருதூர் பஞ்சாயத்து யூனியன் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோவிந்தராஜிடம் வாங்கிய கடன் தொகைக்காக சித்ரா கொடுத்த காசோலை சித்ராவின் வங்கியில் பணமில்லாமல் திரும்பியுள்ளது. இந்நிலையில் கோவிந்தராஜ் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் -3 திருச்சி நீதிமன்றத்தில் சித்ராவிற்கு எதிராக காசோலை மோசடி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். மேற்படி வழக்கை விசாரித்து இன்று (16.03.2023) தீர்ப்பளித்த நீதிமன்றம். சித்ராவிற்கு ஒரு மாத சிறைத் தண்டனை மற்றும் காசோலை தொகையை அபராதமாக மனுதாரருக்கு வழங்க  சித்ராவுக்கு உத்தரவிட்டு  தீர்ப்பளித்தது. 

 

 

சார்ந்த செய்திகள்