Skip to main content

செயற்கைக் கோளை நிலவில் இருந்து அனுப்பலாம்! வியக்க வைத்த அரசுப் பள்ளி மாணவர்!  

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

A government school student who was amazed at space research!

 

ஓப்பன் ஸ்பேஸ் (விண்வெளி ஆராய்ச்சி) பவுன்டேசன் நிறுவனம் லுனார் கேம்ப் 2023-க்கான விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த போட்டியை ஆன்லைன் மூலமாக நடத்தியது. இதில் 29 மாவட்டங்களிலிருந்து, 108 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதற்கட்ட தேர்வில் கலந்து கொண்டனர். 

 

இதில் சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 9 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் பள்ளியின் மாணவன் சக்திவேல் மற்றும் தமிழ் அமுதன் ஆகிய 2  மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வுபெற்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மட்டுமே இதில் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற லுனார் மாடல் வடிவமைப்பு போட்டிக்கு தகுதி பெற்ற இம்மாணவர்கள் 2 பேரும்  தங்களது படைப்புகளை பள்ளிக் குழுச் செயலாளரின் வழிகாட்டுதல்படியும் ஆசிரியர்கள் உதவியுடனும் தயார்செய்து அனுப்பினர்.

 

அதில் சக்திவேல் என்ற மாணவரின் பூமியில் இருந்து செயற்கை கோல்களை அனுப்புவதால் எரிபொருள் அதிகமாகிறது, காற்று மாசு ஏற்படுகிறது. முதலில் நிலாவுக்கு செயற்கைக்கோளை செலுத்தி பின்னர் அங்கிருக்கும் நீரில் ஹைட்ரஜன், ஆக்சிஜனை ரோவர் மூலம் பிரித்து சேமித்து பின்னர் அங்கிருந்து செயற்கைகோளில் ரோவரை இணைத்து செயற்கைக்கோளை இயக்கினால் எரிபொருள், பொருளாதாரம் மிச்சம், காற்று மாசுவை தடுக்கலாம் என்ற  லூனார் ரோவர் லான்ச் (Lunar Rover Launch) என்ற படைப்பு மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளது.  

 

இதனையறிந்த பள்ளிக்குழுச் செயலாளர் அருள்மொழிச்செல்வன் மாணவரின் படைப்பு திறனை பாராட்டி வாழ்த்தினார். அதேபோல் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் வேல்பிரகாஷ், சுமதி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்’ - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Former ADMK MLA Seizure of documents at home  Anti Corruption Bureau 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (28.02.2024) காலை 10 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக டெண்டர் விடுவதில் ரூ. 20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

பன்னீர்செல்வம் மற்றும் அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவரும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 10 மணி நேரமாக நடந்து வரும் சோதனையில் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 47 ஆவணங்கள், விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை சொத்து ஆவணங்கள் என ரூ. 15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

தாய்க்கு பாலியல் தொல்லை; மகன் மர்ம மரணம்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Son who misbehave his mother  passed away mysteriously

கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா - வயது 52 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூலித் தொழிலாளி. இவரது கணவன் ஜெயபால் இறந்துவிட்டார். இவர்களது மகன் குணசீலன்(38). இவர் வேலைக்குச் செல்லாமல் தினமும் அதிக அளவில் குடி குடித்துவிட்டு ஊரைச் சுற்றி வந்துள்ளார்.

இதனால் இவருக்குத் திருமணம் ஆகாமல் தாயுடன் வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிபோதையில் தனது தாயாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக கடலூர் நீதிபதியிடம் அவரது தாய் புகார் அளித்துள்ளார்.  அதன் பெயரில் தூக்கணாம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குணசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இவர் சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் அருகே மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் குணசீலன் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலின் பெயரில் தூக்கணாம்பாக்கம் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, உதவி ஆய்வாளர் தவச்செல்வம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த குணசீலன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது தாயார் சாந்தியை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமீனில் வெளியே வந்த குணசீலன் தனது தாயாருக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தாரா? தற்காப்பிற்காக தனது மகன் குணசீலனை சாந்தி தாக்கியதால் இறந்து போனாரா? அல்லது வேறு யாரேனும் அவரைத் தாக்கியதில் இறந்து போனாரா? என்பது குறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தூக்கணாம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.