Published on 16/02/2019 | Edited on 16/02/2019

அரசு அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்துள்ளது தமிழக அரசு. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பத்திர பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையர் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சுகாதாரத் துறை செயலாளராக பியூலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கோவை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு திருச்சி மாவட்ட ஆட்சியராக IAS சிவராசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.