Skip to main content

கரோனா நோயாளிகளை பரிசோதனைக்கு தனியாரிடம் செல்ல சொல்லும் அரசு மருத்துவமனை..! ஆட்சியரிடம் மனு அளித்த மார்க்சிஸ்ட் கட்சியினர்

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

 

Government hospital tells corona patients to go private for test..! The Marxist parties who petitioned the Collector

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மோசஸ் தலைமையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு ராமச்சந்திரன்,  மாவட்டக்குழு உறுப்பினர் முத்து ஆகியோர் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், “கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  நீண்ட நெடிய போராட்டதிற்கு பின்பு தமிழக அரசு ஏற்று நடத்துவது என்ற அடிப்படையில் தற்போது தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகமாக நடந்து வருகிறது. 

 

இதே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் (RMMCH) அரசே ஏற்று நடத்த வேண்டும். இம்மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி கடலூர் மாவட்ட மக்கள் பயன்படும் வகையில் தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும் என்கின்ற கோரிக்கை எழுந்ததன் விளைவாக மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை  அரசின் சுகாதாரத் துறையின் கீழ் ஏற்று நடத்துவது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. உண்மையில் இப்பகுதி மக்கள் இச்செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

அதன்பின்பு மருத்துவமனையில் அனைத்து துறையிலும் தலைமை மருத்துவர்கள்  மற்றும்  (CARDIO) இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் கண்டுபிடிப்பு அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளும் கூடுதல் படுக்கை வசதிகள் அவசர பிரிவு விரிவுபடுத்துவது குறிப்பாக, இங்கு எவ்வகை நோயாளிகள் வந்தாலும் (REFER) வேறு மருத்துவமனைக்கு அனுப்பாமல் இங்கேயே குணப்படுத்துவது  என்ற நிலையை உருவாக்கிட வேண்டிய சூழலில் கரோனா எனும் பெருந்தொற்று மிகப்பெரிய பாதிப்பை மனிதகுலத்திற்கு உருவாக்கி உள்ளது. 


இதை எதிர்த்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக அரசு இம்மருத்துவமனையை கடலூர் மாவட்ட தொற்று நோய்க்கான மையம் என அறிவித்தது. தற்சமயம் வரை இம்மருத்துவமனை பல மனித உயிர்களை இந்த பெரும் தொற்றிலிருந்து காப்பாற்றி வருகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், முன் களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இரவு பகல் பார்க்காமல் கடுமையாக செயல்பட்டு வருவது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிற இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.     

 

ஆனால்,  இப்பெரும் தொற்றில் பாதிக்கப்பட்டு இம்மருத்துவமனையில் சேர்கிற பல நோயாளிகள், தனியார் மருந்துகடை மற்றும் பரிசோதனை நிலையங்களில் நோய்களுக்கு தேவையான அனைத்தும் பணம் கொடுத்து வாங்கி கொடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்கள் வாங்கி கொடுத்த பின்பே சிகிச்சை வழங்குகின்ற கொடுமை நடந்து வருகின்றது. இந்த நேரத்தில் இதுபோன்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. எப்படியாவது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு மருத்துவர்கள் சொல்லும் அனைத்தையும் நோயாளியின் உறவினர்கள் செய்து வருகின்றனர்.

 

புதிதாக அமைந்துள்ள தமிழக அரசு  தமிழகம் முழுவதும் கரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக உயிர்க்காக்கும் சிகிச்சை அளிக்கும் சூழலில் இந்த மருத்துவமணையிலும் அந்த நிலை தொடர ஆவண செய்ய வேண்டும். இப்பகுதி மக்கள் நலன் கருதி காலம் தாழ்த்தாமல் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர்” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
The Governor has been imposed on TN Minister Palanivel Thiagarajan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும். அதனால்தான் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர். பேரிடரின்போது உதவி கேட்டால், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பது போல் பா.ஜ.க.வைப் பற்றி மக்கள் எண்ணுகின்றனர். கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார்.