Skip to main content

தினந்தோறும் ஆபத்தோடு சாலையைக் கடக்கும் நோயாளிகள்!

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
Government hospital patients crossing the road with danger

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக மருத்துவ துறை பிரிவுகள் சாலையின் இருபுறமும் உள்ள கட்டடங்களில் அமைந்துள்ளது. இதனால் நோயாளிகள் இங்கு அங்கு எனச் சிகிச்சைக்காகவும் பரிசோதனைக்காகவும் இடமாற்றம் செய்கின்றனர். வேலூர் டூ சென்னை செல்லும் சாலை என்பதால் இந்தச் சாலையில் போக்குவரத்து எப்போதும் உள்ளன. இந்தச் சாலையை கடக்க நோயாளிகள், அவர்களது உறவினர்கள், மருத்துவர்கள், செவிலியர் மற்றும் ஊழியர்கள் பெரிதும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவர் பரிசோதனைக்காக சாலையைக் கடந்து ஸ்ட்ரெச்சரில் அவரது உறவினர்கள் கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேப்போன்று அடிக்கடி நோயாளிகள் சாலையைக் கடந்து சென்று வரும் காட்சிகள் வாடிக்கையாகிவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Government hospital patients crossing the road with danger

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் காயம் அடைந்தப் பெண்ணை எக்ஸ்ரே எடுக்க மருத்துவமனை எதிரே உள்ள தனியார் எக்ஸ்ரே மையத்திற்கு ஸ்ட்ரெச்சரில் வாகனங்களுக்கு மத்தியில் அழைத்துச் சென்று மீண்டும் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு வந்தக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோன்ற அவலநிலையை உடனடியாக மருத்துவ நிர்வாகம் மற்றும் தமிழக அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்