Skip to main content

மருத்துவர்களை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அரசு தள்ளிவிட்டுள்ளது - டாக்டர் சங்கங்கள் குற்றச்சாட்டு

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம் கூட்டாக தங்கள் கோரிக்கைகளை இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
 

 

 

தமிழக அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம், பதவி உயர்வு, படிகள் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என தமிழக அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டுள்ளன. பல முறை உயர் அதிகாரிகளை சந்தித்து இது குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு கட்டப் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் ,இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

The government has postponed the hunger strike until the death of the doctors


 

அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கூடாது. அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சி கால பயிற்சி ஊதியத்தை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்திட வேண்டும். இக்கோரிக்கைகளை நிறை வேற்றிட தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் .
 

 

 

சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ள அரசு மருத்துவர்களையும் அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் தலைவர்களையும் தமிழக அரசு உடனடியாக அழைத்துப் பேசவேண்டும். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அவல நிலைக்கு அரசு டாக்டர்களை தமிழக அரசு தள்ளியுள்ளது வருத்தமளிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்கள். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,மற்றும் அரசு அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர்  Dr. C.சுந்தரேசன், ஆகியோர்.

 

சார்ந்த செய்திகள்