
திண்டுக்கல் சிறுமலை பகுதியில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் வசிக்கும் மக்கள் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் திண்டுக்கல்லுக்குத்தான் வரவேண்டும். அதற்காக திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிறுமலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, 18வது கொண்டை ஊசி வளைவில் நிலைதடுமாறி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட தகவலில் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 15 பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.