
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த வரலாறு காணாத விலையேற்றத்தால் ஒரு சவரன் தங்க நகையின் விலை 44,800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய்க்கு உயர்ந்து 5,600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 44,280 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 520 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆகிறது. அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து 77.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.