Skip to main content

கோகுல் ராஜ் தொடர்பான வழக்கு; மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

 

 gokulraj incident case supreme court

 

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் பி.இ. பட்டதாரி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த உடன் படித்து வந்த சுவாதி என்பவரைக் காதலித்து வந்தார். சுவாதி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இதையறிந்த சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை  பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட கும்பல், கடந்த 23.6.2015 அன்று திருச்செங்கோடு மலைக்கோயிலில் வைத்து கோகுல்ராஜை கடத்திச் சென்று கொலை செய்தனர். தலை வேறு உடல் வேறாக நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.

 

இதனைத்  தொடர்ந்து தீரன் சின்னமலை  பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட சங்கர் உட்பட 5 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. 

 

இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி, கோகுல்ராஜுடன் வீடியோவில் இருப்பது நானல்ல. மற்ற மாணவர்களைப் போலவே கோகுல்ராஜுடனும் பேசினேன். கோகுல்ராஜ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியாது" என நீதிமன்றத்தில்  என வாக்குமூலம் அளித்திருந்தார். இந்தநிலையில் உயிர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 

 

இந்நிலையில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுவாதி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் சுவாதியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !