தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஓபி.ரவீந்திரநாத்குமார் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற இடைத் தேர;தல் வேட்பாளர் மயில்வேல் ஆகியோரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே.வாசன் பெரியகுளம் வடகரை சவுராஸ்ட்ரா சத்திரம் பகுதியில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ஜி.கே.வாசனோ..... முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கூடாது என்று கூறும் கேரள கம்யூனிஸ்ட் உடன் தான் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. ஓபிஎஸ் மகனை போட்டியிட வைத்துள்ளதாக திமுக விமர்சனம் செய்கின்றது, 20 நாடாளுமன்ற தொகுதியில் 7 வாரிசுகளை போட்டியிட வைக்கும் திமுக ஓபிஎஸ் மகன் போட்டியிடுவதை விமர்சனம் செய்ய என்ன தகுதி உள்ளது.
ஈரோடு, திருப்பபூர், கிருஷ்ணகிரி என 3 தொகுதிகளில் ஏற்கனவே தோல்வியுற்றவர் தான் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவருக்கும் தேனி தொகுதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. தேனியில் அவருக்கு வடக்கும் தெரியாது தெற்கும் தெரியாது. சென்னையில் வசிக்கும் அவரை எந்த முகாந்திரத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வைக்கின்றது என தெரியவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை இன்று மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர்கள் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர ஓ.பன்னீர்செல்வமும் ஓபிஎஸ் 20 வருடங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்திற்கு வந்ததால் தான் இந்த தொகுதி இவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது. மத்தியில் பிஜபி ஆட்சி அமைவதுதான் தமிழகத்தின் வளர்ச்சி என்று கூறினார்.