
காஞ்சிபுரம் மாவட்டம் விச்சாந்தாங்கல் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது சாமி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டு வண்டியில் வைக்கப்பட்ட ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் விச்சாந்தாங்கல் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு இரவு மாட்டு வண்டியில் சாமி ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாட்டு வண்டியின் பின்புறம் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி லாவண்யா மாட்டு வண்டியில் அமர வேண்டும் என்ற ஆர்வத்தில் ஜெனரேட்டர் அருகில் அமர்ந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கியது. இதில் தலையிலிருந்த மொத்த முடியும் மோட்டார் இழுத்து. அதில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட சிறுமி லாவண்யா காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏழாம் வகுப்பு படித்து வந்த லாவண்யா பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் 7 வயது சிறுமி கோவில் திருவிழாவின்போது ஜெனரேட்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.